Tuesday, October 23, 2007

சமீபத்தில் கேட்டு ரசித்த பாடல்...

நான் சமீபத்தில் கேட்டு மிகவும் ரசித்த பாடல்...
எந்த படம் என்று தெரியவில்லை..உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.

ஆண்:
உயிரே கனவில் வாழும் தேவதையே,
சகியே நேரில் வாடி கண்மணியே

கனவில் கொஞ்சம் நிஜத்தில் கொஞ்சம்,
உன்னில் தானே உள்ளுயிர் துஞ்சும்
விரல்கள் என்னை தீண்டும் போது,
என்னில் காதல் கீதம்

உந்தன் இனிமை பார்க்கும்போது,
மெய்சிலிர்த்து போகிறேன்
அந்த அழகு ஒன்று போதும்,
ஆதலால்தான் வாழ்கிறேன்

என் உயிரே என் உயிரே
நீதானே என் உலகே
உனக்காக தினந்தோறும்
நானும் தேய்கிறேன்

உயிரே கனவில் வாழும் தேவதையே,
சகியே நேரில் வாடி கண்மணியே...்

பெண்:
என்னில் மட்டும் என்ன மாற்றம்,
கனவில் கூட உந்தன் தாபம்
நினைவுகள் உன்னை தீண்டும்
போதும் மனதில் காதல் தீபம்

ஆண்:
கண்விழித்து பார்க்கும்போது
எண்ணம் உந்தன் பிம்பமே
கண்ணை கொஞ்சம் மூடினாலும்
எண்ணம் கூட தயக்கமே

உயிரே என் உயிரே
நீதானே என் உலகே
உயிரோடு தினம் வாழும்
வரம் வேண்டுமே...

பெண்:
என்னில் மட்டும் என்ன மாற்றம்,
கனவில் கூட உந்தன் தாபம்
நினைவுகள் உன்னை தீண்டும் போதும்
மனதில் காதல் தீபம்

கனவில் கொஞ்சம் நிஜத்தில் கொஞ்சம்,
உன்னில் தானே உள்ளுயிர் துஞ்சும்
விரல்கள் என்னை தீண்டும் போது,
என்னில் காதல் கீதம்.

-- வசீகரா